ஒரு நாளில் பல மில்லியன்: தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் செப்டெம்பர் 15ஆம் திகதி பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பார்வையாளர்களின் எண்ணிக்கை
இதற்கமைய பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் சுமார் 100,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், நேற்று(02.10.2022) சுமார் 10,000 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை அக்டோபர் 1ஆம் திகதி சிறுவர்கள் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு 11,752 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட நுழைவுச்சீட்டுகளை வாங்கியுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு நாளில் 2.1 மில்லியன் ரூபாய்
இதற்கமைய, “வார நாட்களில் இந்த கோபுரம் நண்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.
இந்த தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விலை 500 ரூபாவாகும்.
மேலும், தாமரை கோபுரம் திறக்கப்பட்ட முதல் நாள், 2.1 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்தது” என்று கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
