இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையிலான பிரகடனத்துக்கு ஐநா ஒப்புதல்
ஹமாஸின் தலையீடு இல்லாமல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு புதிய உயிர் கொடுக்கும் ஒரு யோசனையான நியூயோர்க் பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த யோசனைக்கு இலங்கை உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேல் மற்றும் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. 12 வாக்குகள் வாக்களிக்கவில்லை.
அமெரிக்கா எதிர்ப்பு
இந்த பிரகடனம், ஹமாஸை தெளிவாகக் கண்டிக்கும், அதேநேரம் அதன் ஆயுதங்களை ஒப்படைகக வேண்டும் என்று கோருகிறது.

ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டு நடவடிக்கைக்கும் இந்த பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri