றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 75க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
யோகா பயிற்சிகள்..
ஆரம்பத்தில் சில ஆசனங்கள் கடினமாக இருந்தபோதிலும், பயிற்சியின் முடிவில் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் அடைந்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நலன் கருதி, பண்ணையில் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேநேரம், ஊழியர்களின் ஆர்வத்தைக் கண்டு யோகா பயிற்றுவிப்பாளர் கலைஞர் குமாரு யோகேஸ்வரன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமே நமது மிகப்பெரிய செல்வம்." நமது அன்றாட பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் யோகாவைத் தொடர்ந்து செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








