வைத்திய நியமனக் கடிதத்தைத் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணுக்கு பிணை
அனுராதபுரத்தில் வசிக்கும் வைத்தியரொருவருக்கு, சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட புதிய நியமனக் கடிதத்தைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் வைத்தியரின் மைத்துனி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அவர், குருநாகல் நீதிவான் நீதிமன்றினால், 10,000 ரொக்கப் பிணையிலும் 100,000 ருபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய பதவி
கடிதம் காணாமல் போனதால் மருத்துவரால் தனது புதிய பதவியை ஏற்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே நியமனக் கடிதம் பெறப்படவிருந்த வீட்டில் இருந்த மைத்துனி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
எனினும், வாதங்களை கருத்திற்கொண்ட நீதிவான் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேகநபரான மைத்துனியை செல்ல அனுமதித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |