லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! குடும்பஸ்தர் மரணம்
குருநாகல், பதேனிய - அனுராதபுரம் வீதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(14.5.2026) இடம்பெற்றுள்ளது.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய - அனுராதபுரம் வீதியில் 36 ஆவது மைல்கல் அருகே, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் சிக்கித் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடனடியாக மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam