யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த சீமெந்து லொறி விபத்து
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் பார ஊர்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (28.01.2026) ஏற்பட்டுள்ளது.
விபத்து
மருதங்கேணியில் இருந்து சீமெந்து பொதிகளுடன் ஆழியவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று உடுத்துறை வேம்படி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, பார ஊர்தியில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதன் காரணமாக தான் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri