பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று(27.01.2026) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம்
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேரிடரின் போதும், அதற்குப் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தின் பிந்தைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நெதர்லாந்து தூதுவர் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் முக்கிய வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்து, குறிப்பாக அனர்த்த அபாயக் குறைப்பில் நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
