ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை
ஜேர்மனியில்(Germany) கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக, கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
இரண்டு முறை கட்டணம்
இவ்வாற தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று கடவுச்சீட்டு அலுவலக மூத்த அதிகாரியான ஹெல்மட் டெடி (Helmut Dedy) என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த பலர், விடுமுறையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, எக்ஸ்பிரஸ் டெலிவரியையாவது பெறலாம் என எண்ணி இரண்டாவது முறை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளார்கள்.
அவர்கள் சுமார் 170 யூரோக்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். அப்படி இரண்டு முறை கட்டணம் செலுத்தியுள்ளோரின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தான் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |