உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின்(Ukraine) மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை ஏவுகணை தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு இது மிக பெரிய தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில், கின்ஜால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்
குறித்த ஏவுகணைகளானது ரஷ்யாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் உள்ளடங்கும் என உக்ரைன் நாட்டின் விமான படை அறிவித்துள்ளது.
இந்த கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்ல கூடிய திறன் வாய்ந்தது எனவும், அதனால் இந்த வகை ஏவுகணைகளை தடுத்து மறிப்பது என்பது கடினம் எனவு கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதல்களால், நகரத்தில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த தாக்குதல்கள் பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது,
வெவ்வேறு வகையான 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உக்ரைனின் 5 நகரங்கள் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |