இந்திய அகமதாபாத்துக்கு நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரி
இலங்கை அரசாங்கத்தால் அகமதாபாத்தில் இலங்கைக்கான தூதரக அதிகாரியாக GSEC Ltd இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராகேஸ் ராமன்லால் சா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று(08) இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் க்சேனுகா செனவிரத்னவிடமிருந்து தனது நியமன ஆணையத்தைப் பெற்றார்.
பொருளாதார தொடர்புகள்
இந்த பதவி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, குஜராத்துடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துறைமுக மேம்பாடு, உட்;கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், இரசாயன மற்றும் விவசாய உணவுத் தொழில்கள், மருந்துகள் மற்றும் ஆடைகள் உட்பட இந்தியாவில் குறிப்பிடத்தக்க தொழில்களுக்கு குஜராத் புகழ் பெற்றது.
முன்னதாக, இலங்கை அரசாங்கத்துக்கும் குஜராத்துக்கும் பொருளாதார தொடர்புகளை எளிதாக்குவதற்காக, இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குஜராத் மாநிலத்திற்கு இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட முதலாவது தூதரக அதிகாரி ராகேஸ் ராமன்லால் சா கருதப்படுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |