இஷா புயலுக்கு முடங்கிய லண்டன்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் லண்டனில் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ளது.
இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடருந்து சேவைகள் இரத்து
இதன் காரணமாக தொடருந்து சேவைகள் தாமதமாகலாம் என்றும், பல நிறுவனங்கள் சேவையை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, பர்மிங்காம் மற்றும் லண்டன் யூஸ்டன் இடையே தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வழித்தடங்களில் குறைந்த சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலத்த காற்று
லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகள் தவிர பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் தொடருந்து சேவை நிர்வாகம், அதன் அனைத்து அவசர நேர தொடருந்துகளையும் இரத்து செய்துள்ளதாகவும் திங்கட்கிழமை பிற்பகல் வரையில் சேவைகள் இருக்காது என்றும் எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |