இந்திய மாணவர்களின் போராட்டத்திற்கு லண்டனில் இருந்தும் ஆதரவு
இந்தியாவில் 'காஃக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் லண்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் கல்வி முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் புதுடெல்லியில் மாணவர்கள் பல நாட்கள் தீவிரப் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவின் கல்வி அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்தியக் கல்வி அமைச்சரின் பதவி விலகல்
லண்டனின் டிராஃபால்கர் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் உரையாற்றிய கிரெட்டா துன்பெர்க்,
"இந்திய மாணவர்களின் போராட்டம் நம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளதுடன், புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் போது என்ன சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
மக்களின் உண்மையான அதிகாரத்தை அவர்கள் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்," என பாராட்டியுள்ளார்.
இந்திய மாணவர்களின் நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த போராட்டம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது என்று குறிப்பிட்ட அவர், இந்திய இளைஞர்களுடன் தாம் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.