லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்து!
அநுராதபுரம் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது வாரியபொல - தங்கஹமுல பிரதேசத்தில் நேற்று(25.10.2024) இடம்பெற்றுள்ளது.
லோகன் ரத்வத்த பயணித்த காரின் பின்னால் பயணித்த டிஃபென்டர் ரக கார், முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த கார் வீதியை விட்டு விலகி பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தால் பேருந்து தரிப்பிடம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வாகனத்தில் உரிமம் பெற்ற இரண்டு ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri