பல சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு
தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள 60 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுமார் 1,500 சிற்றுண்டிச்சாலைகள் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றையதினம் முதல் அரச வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றமையால் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட வேண்டிய உணவுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இதனால் நம் துறை சார்ந்தோர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
