உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு கையளிப்பு: மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அதிகாரி வழங்கியுள்ள தகவல்
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் வேட்புமனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி யுலேக்கா முரளிதரன் தெரிவித்தார்.
இன்று (15.03.2025) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும்.
தேர்தல் அலுவலகம்
இதன்போது வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள், மற்றும் 9 பிரதேச சபைகளுக்கான, தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளன.
அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் தேர்தல் அலுவலகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோர் இறுதிவரை காத்திடாமல் தங்களது வேட்பு மனுக்களை நேரகாலத்துடன் தாக்கல் செய்யவும், மாவட்டத்தில் அமைதியான தேர்தலை முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
