தேர்தல் ஆணைக்குழுவிற்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு பிரதமரிடம் கோரியிருந்தது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுடன் பிரதமர் சந்திப்பு நடத்த உள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு நாளை கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
