தேர்தல் முடிவுகளால் நெருக்கடியில் அநுர கட்சி! பல தமிழ் கட்சிகள் அமோக வெற்றி
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் ஆளும் அரசாங்கத்தின் கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.
எனினும் பல தொகுதிகளில் அமோக வெற்றியை பெற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான கட்சி தவறியுள்ளன.
ஆளும் கட்சிக்கு நெருக்கடி
பல தொகுதிகளில் எதிர்க்கட்சிகளும் கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளனர். இதன் மூலம் இலகுவாக ஆட்சி அமைப்பத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை அந்த கட்சி இதுவரை பெறவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மிகவும் இலகுவாக ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைப்பாடே தற்போது காணப்படுகிறது.
அமோக வெற்றி
அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.