இரும்புக் கம்பியால் அடித்து தந்தையைக் கொலை செய்த மகன் கைது
கலேவெல பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி தந்தையைக் கொலை செய்த மகன் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மகன் இவ்வாறு இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகன் கைது
அதன் பின்னர் தந்தையின் உயிரிழப்பை மறைக்க நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை சந்தேக நபரான மகன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் எதுவும் வெற்றியளிக்காத நிலையில் அண்டை வீட்டுப் பெண் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பிரதேச பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி சந்தேக நபரான மகனையும் கைது செய்துள்ளனர்.