அரச ஊழியர்கள் பலருக்கு நாளை விடுமுறை
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07) கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாளை விடுமுறை
தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025.05.06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்கெண்ணும், தேர்தல் முடிவுகளை அட்டவணைப்படுத்தும், குறித்த பணிகளில் உதவிச் சேவைகளை வழங்கும் கடமைகளில் ஈடுபட்டு அதற்கான வரவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri