யாழில் மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் அதில் ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸர்
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |