ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை கொண்டாட திரண்ட பெருந்தொகை மக்கள்
புதிய இணைப்பு
டி 20 உலகக்கிண்ண தொடரின் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற பங்களாதேஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றியீட்டிய ஆப்கான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை அந்நாட்டு மக்கள் வீதிகளில் குவிந்து கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது 19 ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் மக்கள்
ஆப்கானிஸ்தான் மக்கள் உள்நாட்டு போரின் பின்னர் பாகிஸ்தானில் இருந்து தாய்தேசத்துக்கு திரும்பியபின் அந்த நாட்டுக்கு தனியாக ஐசிசியில் உறுப்புரிமையை பாகிஸ்தான் பெற்றுக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானுடன் எந்த நாட்டு அணியும் கிரிக்கெட் விளையாட முன்வராத போது, தனது நாட்டிற்கு அழைத்து கிரிக்கெட் விளையாடச் செய்து பாகிஸ்தான் ஊக்கமளித்தது.
2001ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் (ஐசிசி), 2003ஆம் ஆண்டில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் (ஏசிசி) ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.
@tamilwinnews ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை கொண்டாட திரண்ட பெருந்தொகை மக்கள் #lankasrinews #Tamilwin #afganistan????????????? #ICC ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது.
ஐபிஎல் டி20 தொடர்
ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக், பங்களாதேஸ், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கும், இடம் கிடைப்பதற்கும் ஐபிஎல் டி20 லீக் பெரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது.
இதன் தொடக்கமே சர்வதேச தளத்தில் ஜாம்பவான்கள் அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பங்களாதேஸ் , மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளிக்க முடிந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியில் பல்வேறு கால கட்டங்களிலும் பயிற்சியாளர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர்.
அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ், இந்திய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் லான்ஸ் க்ளுஸ்னர், இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராஹம் தோர்ப், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் ஆகியோரின் காலகட்டம் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நடப்பு உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
ரகமதுல்லா குர்பாஸ்
எனினும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக போட்டி அமைந்திருந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரகமதுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரிஷாட் ஹொசைன் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை, போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் 114 என்ற வெற்றி இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.
உலகக்கிண்ணத் தொடர்
இந்நிலையில் வெற்றியிலக்கான 114 ஓட்டங்களை நோக்கி பதிலெலுத்தாடிய பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதற்கமைய, 2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளன.
அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |