விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரித்து வந்த ரணில்! இதுவரை தெரியாத உண்மைகளை வெளியிடும் கருணா
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் (Ranil Wickremesinghe). இதன் காரணமாக தான் யுத்தம் முடிவடைந்தது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2003ஆம் ஆண்டு நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து என்னை அழைத்துச் சென்றவர்கள் அலிசாஹிர் மௌலானாவும், அன்வர் ஹாஜியாரும்தான். அன்வர் ஹாஜியாரின் வாகனத்தில் தான் நான் வந்தேன்.
அந்த இருவராலும் தான் நாங்கள் அன்று காப்பாற்றப்பட்டோம். இந்த உண்மை இப்போது வரை யாருக்கும் தெரியாது.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் தான் நாங்கள் சந்தோசமாகவும் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
