நாட்டு மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! மீண்டும் ஆரம்பமாகும் வரிசையுகம்
நாட்டில் நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் மறைப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் குற்றசாட்டு
இதேவேளை விலை மாற்றம் ஏற்பட்டாலும் எரிவாயு விநியோக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெட்டனில் பகுதியில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிட்ரோ நிறுவனம் ஹட்டனில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு ஒரு மாத காலமாக குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்கி வருவதால் இந்த எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுபாடு
இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு விநியோகிக்கவுள்ளதாக மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு விற்பனை நிலையங்களில் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறுதியாக லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இரு வாரங்களுக்கு முன்னர் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 4360 ரூபாவாகவும் ஐந்து கிலோகிராம் எரிவாயுவின் 1750 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 815 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
