லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு! புதிய விலை விபரம் வெளியானது
புதிய இணைப்பு
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4360 ரூபாவாகும்.
மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயுவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1750 ரூபாவாகும்.
அதேவேளை, 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 815 ரூபாவாகும்.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடை எரிவாயு கொள்கலனின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட ஒரு தொகையினால் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் அறிவிக்கப்படும்
எனினும் சரியானை தொகை பின்னர் அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.