நாட்டு மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி! மீண்டும் ஆரம்பமாகும் வரிசையுகம்
நாட்டில் தொடர்ந்து எரிவாயு தட்டுபாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது.
எரிவாயு தட்டுபாடு
இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு பல நாட்கள் அலைய வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் தினமும் கையிருப்பு பெற்றாலும் கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வரிசையில் மக்கள்
இதனால் மீண்டும் வரிசையில் காத்திருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, கட்டுநாயக்க, மஹர, பத்தரமுல்லை போன்ற பல பிரதேசங்களில் போதியளவு கையிருப்பு கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில பகுதிகளில் சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கையிருப்பு கிடைப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
