வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவது குறித்து நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி நான்கு வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,
25 இருக்கைகள் கொண்ட பேருந்துகள், 10 முதல் 16 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வான்கள், இரட்டை கெப் வாகனங்கள்; மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்ய இந்த வர்த்தமானி அனுமதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
எனினும் இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி கட்டமைப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், தொடர்புடைய சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி பொருந்தாது என்பதை தெளிவுபடுத்திய அவர், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம், அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anurakumara Dissanayake) தலைமையில், நேற்று 1969 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam