நீதி வெல்லும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக கூறும் நாமல் ராஜபக்ச
கிரிஸ் நிறுவன நிதி மோசடி தொடர்பாக சட்டமா அதிபர், தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதித்துறை மீது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த குற்றப்பத்திரிகை, தற்போதைய அரசாங்கத்தால் ராஜபக்ச குடும்பத்தை குறிவைத்து நடத்தப்படும் அரசியல் வேட்டையின் ஒரு பகுதியாகும் என்று அவர் தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இது தொடர்பில் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் 8 ஆண்டுகளுக்கு முன்னர், சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டது.
நீதித்துறையின் மீது நம்பிக்கை
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனது சொந்த தோல்விகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
