சிங்கங்கள் ஒருபோதும் புல்லை மேய்வதில்லை! - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பதிலடி
என்ன தடைகள் வந்தாலும் சிங்கங்கள் புல்லை மேய்வதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர் குழுவொன்று தன்னிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள மறுத்தமை தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் இருந்து பட்டம் பெறுவதும், ஏற்காததும் அவர்களின் உரிமை என்றும், அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்.....
முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகளை பாராட்டிய சோபித தேரர்
மேடையில் வைத்து முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகள்! வெளியானது காணொளி
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



