24 கிராம் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
24 கிராம் ஹெராயினை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக கொழும்பு உயர் நீதிமன்றம் சந்தேக நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(29.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திகா சி. ரகல இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஆயுள் தண்டனை
2022ஆம் ஆண்டில் கொழும்பின் மொதறைப் பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது, சந்தேக நபர், 24 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து உத்தரவை அறிவித்த நீதிபதி, அரசுத் தரப்பால் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட பின்னர், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.