ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு வாழ்நாள் சிறை! ஓரிரு மாதங்களில் மாற்றம் - வெளியான தகவல்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் தங்களுடைய வாழ்நாளை சிறைச்சாலைக்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்று இடதுசாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலின் தரக்குறைவான போக்கிற்கு இந்த ராஜபக்ச குடும்பமே அடையாளமாக காணப்படுகின்றது.
ராஜபக்ச குடும்ப மாஃபியா
ராஜபக்சவினர் விரைவில் தங்களுடைய வாழ்நாள் முழுதையும் சிறையிலேயே கழிப்பதற்குரிய நிலையை அடையப் போகின்றனர். தற்போது இந்த நிலை தெளிவாகத் தெரிகின்றது.
தங்களுடைய குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் திருட்டு மற்றும் ஊழல் போன்ற வழித்தடத்திற்கு இட்டுச் சென்றதன் விளைவே இதுவாகும்.
இது இலங்கை அரசியலை ஒழுக்கமற்ற நிலைக்குக் கொண்டு சென்றதற்கான ஒரு அடையாளமாகவே நான் பார்க்கின்றேன்.

ராஜபக்ச குடும்பம் என்பது ஒரு மாஃபியா குடும்பம் என்றே உலகம் முழுவதும் அறியப்படுகின்றது.
ஒரு நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுச் செல்லக் கூடிய ஒரு குடும்பம் இருந்தால் அது ராஜபக்ச குடும்பம்தான் என்பது உலகறிந்த உண்மை.
எனவே, இலங்கை அரசியலுக்குள் இருந்து இந்த குடும்பம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam