ஐ.நா. ஆணையாளருக்கான கடிதம்: சகல தரப்பினருடனும் வார இறுதியில் பேச்சு - கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு

United Human Rights United Nations Gajendrakumar Ponnambalam
By Rakesh Jul 14, 2025 08:01 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் அமைப்புகளை ஓரிடத்தில் சந்தித்துப் பேசவுள்ளோம் என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அவரின் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை குற்றவாளி - மனைவியுடன் தப்பியோட்டம்

வெளிநாடொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை குற்றவாளி - மனைவியுடன் தப்பியோட்டம்

இனப்படுகொலைக்கான குற்றங்கள், போர்க் குற்றங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஜனவரி மாதம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டு ஐ.நா. மட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தேசத்துக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என்பன எவ்வாறு கையாளப்பட வேண்டும்.

gajendrakumar ponnambalam

அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும், ஆகவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது இலங்கை தொடர்பில் குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்டு முழுமையான சர்வதேச விசாரணை நடைபெறும் என்று வலியுறுத்திக் கடிதம் ஒன்றை எழுதினோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் வழங்கினோம்.

தென்னிலங்கையில் ரிக்ரொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்

தென்னிலங்கையில் ரிக்ரொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்

விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரம்

அந்தக் கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கையொப்பமிட்டனர். அந்தக் கடிதம் வழங்கி அடுத்த வாரமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசிடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தைக் கூறி அதற்கு மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றார்கள். இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு.

volker turk

செம்மணியில் நடந்தது அநியாயம். இலங்கை அரசு இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில் எதேர்ச்சியாக தற்போது வெளிவந்திருக்கின்ற ஆதாரங்களை மூடி மறைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதாகவே இந்த கடிதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக எதிர்வரும் வாரத்தின் இறுதியில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவரையும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் மனித உரிமை அமைப்புகளையும் ஓரிடத்தில் சந்தித்து 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்குக் கூட்டம் ஒன்றை நடத்த நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

முடக்கப்பட்டது அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கடவுச்சீட்டு!

முடக்கப்பட்டது அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கடவுச்சீட்டு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US