சஜித் பிரேமதாச -சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அரச தரப்பு எம்.பி
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருக்கிடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையில் கொடுக்கல் வாங்கல் ஒன்று அதாவது டீல் ஒன்று நடந்துள்ளதாக அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவிதான இன்று (24.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரத்தில் தங்களுக்கு உதவி செய்யுமாறு நடத்தப்பட்ட இரகசி கலந்துரையாடலில் வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின் போது மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாச ரஜீவ் அமரசூரியவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்
இந்த கலந்துரையாடல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.இந்த சட்டத்தரணிகள் சங்கம் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாத்தான தலையீட்டிற்கு எதிராக,
அதாவது ராஜபக்ச ஆட்சியில் முழு நீதிமன்ற அமைப்பையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதம நீதியரசரை வெளியேற்ற முற்பட்ட போது, அதற்கு எதிராக நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம் அன்று இருந்தது.
அதேபோல் தான், 'அரகலய' போராட்ட காலத்திலும் இந்நாட்டின் இலட்சக்கணக்கான பொது மக்களுக்காக நின்ற சங்கம் அது. ஆனால் இன்று, அதன் தற்போதைய தலைவர் ஒரு சிறிய குழுவுடன் சேர்ந்து, முதலமைச்சர் பதவிக்காக முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நோக்கத்தையும் காட்டிக்கொடுத்து, சஜித் பிரேமதாசவுக்கு பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள சகோதர சட்டத்தரணிகளிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்: உங்களுக்குப் புகழ்பெற்ற ஒரு வரலாறு உள்ளது.
நீங்கள் அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக எப்போதும் நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம். எனவே, தலைவரின் அடுத்த முதலமைச்சர் கனவுக்காக ஒரு சிலரின் நலனுக்காக உங்களின் அந்த கௌரவமிக்க சட்டத்தரணி பதவியை காட்டிக் கொடுக்காதீர்கள்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan