சுரேஷ் சலேவின் விவகாரம்! குடும்பத்தினர் திருத்தந்தைக்கு அவசர கடிதம்
தற்போது குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் காவலில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளனர்.
சுரேஷ் சலேவின் மனிதாபிமான பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, இலங்கைக்கான திருத்தந்தையின் தூதுவரான அப்போஸ்தலிக்க நன்சியோவிடம் குறித்த கடிதத்தை கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவமனையில் அனுமதி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இன்னும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
சுரேஷ் சலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகின்ற நிலையில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இவ்வாறான சூழலில், சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் திருத்தந்தை பதினான்காம் லியோவுக்கு கடிதத்தை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO