தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் (Photos)
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு
கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri