தமிழர் பிரச்சினை தொடர்பில் நரேந்திர மோடிக்கு கடிதம்
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(07.07.2023) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.
பதின்மூன்றின் நிலைமைகள்
இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை, இன விடுதலைக்கான தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளோம்.
குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.
மேலும், இந்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் கிடைத்ததும் கட்டாயம் மோடிக்கு அனுப்பப்படும்."என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
