இலங்கை நீதிக்கான மையத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

Sri Lanka Police Government Of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Farook Sihan Jun 29, 2026 09:33 PM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும் "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாச்சியையும் கிழக்கு மக்களின் அடிப்டை உரிமையினையும் மீறும் செயலென இலங்கை நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோரப் பகுதி அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறையானது, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான நடவடிக்கை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வளைகுடா பகுதியில் நிலவும் அமைதியின்மை! பெரும் அச்சத்தில் முதலீட்டாளர்கள்

வளைகுடா பகுதியில் நிலவும் அமைதியின்மை! பெரும் அச்சத்தில் முதலீட்டாளர்கள்

சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை

இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை இந்த முடிவு அப்பட்டமாக மீறுவதாகத் தெரிவித்து, இலங்கை நீதிக்கான மையம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மிக அவசரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாகக் கைவிடுமாறு  உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் பிரத்தியேகமான பிரச்சினைகள் அல்ல எனவும், தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தேசியப் பிரச்சினையாகும் எனவும் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நீதிக்கான மையத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் | Letter Sent President By Sri Lanka Center Justice

ஏனைய மாகாணங்களை விடுத்து, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பல்லின சமூகமாக வாழும், யுத்தத்திற்குப் பின்னரான காணி இழப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மட்டும் இவ்வாறு அதிகாரம் வாய்ந்த விசேட குழுவினை நிறுவுவது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும்.

இன, மத, பிராந்திய பாகுபாடுகளின்றி சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் மிகத் தெளிவாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், இந்த தனியொரு மாகாண பொறிமுறையானது அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது என சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

இத்தாலியில் வீடொன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்! ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்

இத்தாலியில் வீடொன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்! ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்

சட்டக் கட்டமைப்புகள்

மேலும், காணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கவும் 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரசு நிலங்கள் சட்டம், (State Lands (Recovery of Possession) Act No. 07 of 1979) அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என இலங்கையில் ஏற்கனவே போதுமான மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தற்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டே, பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸார் ஊடாகத் தீர்க்க முடியும் எனும் போது, புதிய குழுக்களை எதற்காக என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது.

இலங்கை நீதிக்கான மையத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் | Letter Sent President By Sri Lanka Center Justice

தற்போது இலங்கைக்குத் தேவைப்படுவது நாட்டிலுள்ள தற்போதைய சட்டங்களை ஒன்பது மாகாணங்களுக்கும் பாரபட்சமின்றி, சமமாக அமுல்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் (Political Will) மட்டுமே ஆகும் என்றும் இலங்கை நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஜூன் 22 அன்று எடுக்கப்பட்ட இந்த அமைச்சரவை முடிவை உடனடியாக நிறுத்தி வைத்து, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொது மக்கள் ஆலோசனைகளை நடத்துமாறும், சட்டத்தை நாடு முழுவதற்கும் பொதுவானதாக சமத்துவத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இலங்கை நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US