பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை! வெளியான அறிவிப்பு
வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்தில், எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு வழங்கப்படாவிடின், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பதிலாக, எரிபொருள் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக, அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவை நாளை(1.7.2026) போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை
இதேவேளை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், தமது போக்குவரத்து கட்டணங்களை மாற்ற இயலாது என, தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்துறை சார் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்தும் தமது தொழிற்துறை 16 ரூபாய் என்ற அடிப்படையில் நட்டத்தில் இயங்கி வருவதாக, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ரோஹன பெரேரா கூறியுள்ளார்.