கேகாலையில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
கேகாலை - கலிகமுவை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் அவரது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று(29.06.2026) இடம்பெற்றுள்ளது.
கலிகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் சடலம்
சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தங்கியிருந்த வீட்டின் உள்ளே தவறான முடிவெடுத்தவாறு காணப்பட்ட நிலையில், அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த கலிகமுவை பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தவரான முடிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri