ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்
ஜெர்மனியின் வடபகுதியில் அமைந்துள்ள ஸ்டாடே நகரில் அமைந்துள்ள இளைஞர் மையம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் முக்கிய சந்தேகநபர் எனவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் வயது அல்லது அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கு தற்போது மேலதிக அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிஸ் மற்றும் அவசரகால மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 50,000 மக்கள் வசிக்கும் ஸ்டாடே நகரம், ஜெர்மனியின் முக்கிய நகரமான ஹாம்பர்க்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் நிலையில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri