மாத்தளையில் நடந்த கோர விபத்து - 29 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(29.06.2026) மதுராகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறியுடன் மோதி விபத்து
மேற்படி இளைஞர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், குடா ஓயா பாலத்துக்கு அருகில் சென்றபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறியுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அனுமதிக்கப்படும் போதே ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.