கொழும்பில் கோர விபத்தில் சிக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!
கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(29.6.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கெஸ்பவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்று மாலை கடுவெலை பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த பாரவூர்தியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்தக் கோர விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மேற்படி பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.