நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை
நுவரெலியாவில் அரிசின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டநுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை
நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களை கைது செய்வதற்காக குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என அதன் தலைவர் அமில ரத்நாயக்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |