மைத்திரிபால மற்றும் ரணில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கு முடிவு
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவை மனைவிமாருக்கான உத்தியோகபூர்வ வாகனம், வாசஸ்தலம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
வருடமொன்றுக்கு 25 கோடி ரூபா
இதன் மூலம் வருடமொன்றுக்கு 25 கோடி ரூபாவை சேமிக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிரிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.




