கடலில் இராணுவப்பயிற்சி மேற்கொள்ளும் ரஷ்யா -சீனா! அதிகரிக்கும் போர் பதற்றம்
ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது "Maritime Interaction-2025" எனப்படும் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டமிட்ட கூட்டுப் பயிற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் பயிற்சி
இந்த பயிற்சி வரும் ஓகஸ்ட் 05 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகள், ரஷ்யாவின் பசிபிக் கடற்படையின் பாரிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களும், சீனாவின் இரண்டு Destroyer கப்பல்களும் உள்ளடக்கிய குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றன.
இவற்றில் இரு நாடுகளின் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு கப்பலும் பங்கேற்றுள்ளன.
கடல், வான்வழி பாதுகாப்பு, புலனாய்வு, தற்காப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
ரஷ்யா-சீனா
இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடெவ் வழங்கிய "பிரச்சனையூட்டும்" கருத்துகளுக்குப் பிறகு அணு நீர்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளில் நிறுத்த உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது.
எனினும், இந்த பயிற்சிகள் முன்பே திட்டமிடப்பட்டவை.
ரஷ்யா-சீனா இரண்டும் 2022-ல் உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன் "no-limits" என்ற ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்நிலையிலும் இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




