முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவருக்கு அரசாங்க பங்களாக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வீடுகளை கையளிப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச பங்களாக்களின் எண்ணிக்கை
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு (முன்னாள்) வழங்கப்பட்ட அரச பங்களாக்களின் எண்ணிக்கை ஐம்பது எனவும் கூறப்படுகின்றது.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு, அனைத்து அரசாங்க பங்களாக்களையும் உடனடியாக ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அண்மையில் அறிவித்திருந்தது.
இதற்கமைய, பங்களாக்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam