ஈரான் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராடங்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறையில் குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு, இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு தழுவிய தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தகவல்களைச் சரிபார்ப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை
முன்னதாக, எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பேன் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

எனினும், ட்ரம்பின் கருத்துக்களைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்கா "வஞ்சகம்" செய்வதாகவும் "துரோக கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்.
அதே நேரத்தில் அரசு ஏற்பாடு செய்த அரசாங்க சார்பு பேரணிகளைப் பாராட்டியுள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri