யாழில் பட்டப்பகலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்
யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(11.1.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றையதினம் கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு செய்துள்ளார்.
ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை.

மோட்டார் சைக்கிள் களவு போனதை அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri