இலங்கையில் சமீபத்திய வாரங்களில் பதிவான நிலச்சரிவுகள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் சுமார் 4,800 நிலச்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மீகஹகொடுவா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாடு தழுவிய செயற்கைக்கோள் படம்
டித்வா சூறாவளிக்குப் பிறகு பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரவுகள் விரிவான மண்சரிவு வரைபடத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் மீகஹகொட்டுவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரைபடங்களின் பகுப்பாய்வில், ஊடகங்கள் மூலம் இதுவரை அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட உண்மையான நிலச்சரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
நாடு தழுவிய செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு நாடு முழுவதும் நிலச்சரிவுகளை முழுமையாக வரைபடமாக்க உதவியுள்ளது,
இது நிலச்சரிவு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 4,800 ஐ நெருங்கி வருவதைக் குறிக்கிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
”டித்வா சூறாவளியின் போதும் அதற்குப் பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, நிலச்சரிவு வரைபடத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்த வரைபடங்களின் அடிப்படையில், ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதை விட நிலச்சரிவுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அடையாளம் காண முடிந்தது. செயற்கைக்கோள் படங்கள் மூலம், 4,800 நிலச்சரிவு சம்பவங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri