பெரும்பாலான குளங்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி நில்வளா கங்கையின் அக்குரெஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்துள்ளார்.
இன்று (5) காலை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 125 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழை பெய்துள்ளதாகவும், ஆற்று நீர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.
ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பு
ஏனைய பகுதிகளில் மழை இல்லாததால் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அர்த்தமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், நீர் தொட்டிகளில் ஆபத்தான நீர் கசிவு இல்லை என்றும், பெரும்பாலான குளங்களில் சாதாரண மட்டத்திலேயே கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுறுத்தல்
இருப்பினும், மழைப்பொழிவு அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பு இருப்பதாகவும், எதிர்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து ஒவ்வொரு நதியின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.
எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri