மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யுத்தி நடவடிக்கையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு வாவிக்கரையில் பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று முன்தினம் (30) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்கோது கசிப்பு உற்பத்தியல் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் 25 பீப்பாக்கள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை
இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலமையிலான பொலிஸ் குழுவினரே வாவிக்கரை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டதையடுத்து அங்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான சென்று பார்வையிட்டு தமது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
